Menu
Your Cart

ஓரான் பாமுக் நாவல்கள் (Combo)

ஓரான் பாமுக் நாவல்கள் (Combo)
ஓரான் பாமுக் நாவல்கள் (Combo)
ஓரான் பாமுக் (ஆசிரியர்), ஜி.குப்புசாமி (தமிழில்)
₹1,400
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
FREE shipping* (within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.

பனி:

ஓரான் பாமுக்கின் படைப்புகளில் தனித்துவமான நாவல் ‘பனி’. சொல்லப்படும் கதையும் கதை நிகழும் களமும் அவரது பிற நாவல்களிலிருந்து முற்றிலும் மாறுபட்டவை. பாமுக்கின் படைப்புகளில் வெளிப்படையாக அரசியல் பேசும் நாவல் ‘பனி’. மதச் சார்புக்கும் சார்பின்மைக்கும் இடையிலான மோதலைத் துப்பறியும் கதையின் வேகத்துடனும் திருப்பங்களுடனும் சொல்கிறது இந்த நாவல். தனது படைப்புகளின் நிரந்தரக் களமான இஸ்தான்புல் நகரத்தைவிட்டு துருக்கியின் எல்லைப்புற நகரமான கார்ஸை புனைகளமாக்கியிருக்கிறார் பாமுக். ஒரு பனிக் காலத்தில் அந்த நகரத்துக்கு வந்து சேரும் பத்திரிகையாளன் ‘கா’வின் அனுபவங்களே இதன் கதை. இரட்டை ஆன்மா கொண்ட துருக்கியின் நிகழ்கால வரலாற்றையும் மானுட நிலையையும் நுட்பமாக முன்வைக்கும் படைப்பு.

என் பெயர் சிவப்பு:

இந்நாவலின் காலம்: பதினாறாம் நூற்றாண்டு. களம்: துருக்கியின் தலைநகரான இஸ்தான்புல். ஆட்டமன் சாம்ராஜ்ஜியத்தின் சுல்தான் மூன்றாம் மூராத் ஹிஜ்ரா சகாப்தத்தின் ஆயிரமாவது ஆண்டுத் தொடக்கத்தைக் குறிக்கும் ‘விழா மலரை’ உருவாக்க விரும்புகிறார். ஆட்டமன் பேரரசின் மகத்துவங்களையும் தன்னுடைய கீர்த்தியையும் பதிவு செய்யும் வகையில் மலரை உருவாக்கும் பொறுப்பை இஸ்தான்புல்லின் நுண்ணோவியர்களிடம் ஒப்படைக்கிறார். நூலாக்கம் நடந்து கொண்டிருக்கும் தருணத்தில் இரண்டு நுண்ணோவியர்கள் மர்மமான முறையில் அடுத்தடுத்துக் கொல்லப்படுகிறார்கள். முதலில் மெருகோவியன் வசீகரன் எஃபெண்டி. பின்னர் நூலுரு வாக்கத்துக்குப் பொறுப்பாளரான எனிஷ்டே. அவர்களைக் கொன்றது யார்? கொலைக்குக் காரணம் என்ன? என்ற கேள்விகளிலிருந்து விரிகிறது நாவல். பன்னிரண்டு கதாபாத்திரங்களின் மொழிகளில் முன்னேறுகிறது ‘கதை’. நாவலின் இரு புள்ளிகள் காதலும் குற்றமும். இவற்றை இணைக்கும் கதைக் கோட்டுக்கு மேலும் கீழுமாக மதத்தின் கட்டுப்பாடுகளையும் கலையின் சுதந்திரத்தையும் விவாதிக்கிறார் ஓரான் பாமுக். ‘என் பெயர் சிவப்பு’-2006ஆம் ஆண்டு இலக்கியத்துக்கான நோபெல் பரிசு பெற்ற ஓரான் பாமுக்கின் தமிழில் வெளிவரும் முதல் படைப்பு.

Book Details
Book Title ஓரான் பாமுக் நாவல்கள் (Combo) (Orhan Pamuk Novels (Combo))
Author ஓரான் பாமுக் (Oran Pamuk)
Translator ஜி.குப்புசாமி (Ji.Kuppusaami)
Publisher காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Publications)
Published On Oct 2021
Year 2021
Edition 1
Format Paper Back
Category Novel | நாவல், Translation | மொழிபெயர்ப்பு, Classics | கிளாசிக்ஸ், Combo Offer

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

ஓரான் பாமுக்கின் படைப்புகளில் தனித்துவமான நாவல் ‘பனி’. சொல்லப்படும் கதையும் கதை நிகழும் களமும் அவரது பிற நாவல்களிலிருந்து முற்றிலும் மாறுபட்டவை. பாமுக்கின் படைப்புகளில் வெளிப்படையாக அரசியல் பேசும் நாவல் ‘பனி’. மதச் சார்புக்கும் சார்பின்மைக்கும் இடையிலான மோதலைத் துப்பறியும் கதையின் வேகத்துடனும் தி..
₹618 ₹650
துயரம், நினைவுகள், காதல் - இவை மூன்றும்தாம் ஜான் பான்வில்லின் 'கடலை' உருவாக்கியிருக்கும் கூறுகள். கலை வரலாற்று ஆய்வாளரான மாக்ஸ் மார்கன் இளம் பருவத்தில் விடுமுறையைக் கழித்த கடலோர கிராமத்துக்கு மனைவி அன்னாவின் மறைவுக்குப் பிறகு திரும்பவும் வருகிறார். பிள்ளைப்பிராயக் கோடைக்காலத்தில் பார்த்த அதே கிர..
₹325
காலம்: பதினாறாம் நூற்றாண்டு. களம்: துருக்கியின் தலைநகரான இஸ்தான்புல். ஆட்டமன் சாம்ராஜ்ஜியத்தின் சுல்தான் மூன்றாம் மூராத் ஹிஜ்ரா சகாப்தத்தின் ஆயிரமாவது ஆண்டுத் தொடக்கத்தைக் குறிக்கும் ‘விழா மலரை’ உருவாக்க விரும்புகிறார். ஆட்டமன் பேரரசின் மகத்துவங்களையும் தன்னுடைய கீர்த்தியையும் பதிவு செய்யும் வகை..
₹808 ₹750
சாதி, மதம், தேசியம் ஆகியவற்றின் அங்கிகளை கிழித்தெறிந்து மானுடத்தின் நிர்வாணத்தை பகிரங்கப்படுத்தும் இப்படியொரு புத்தகம் மிக அரிதாகவே காணக் கிடைக்கும்.1997 ஆம் ஆண்டிற்கான புக்கர் பரிசு பெற்ற நாவல்...
₹466 ₹490